search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நவீன கருவி"

    10 அரசு ஆஸ்பத்திரிகளில் 170 கோடி மதிப்பீட்டில் புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன கருவி அமைக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
    சென்னை:

    எழும்பூர் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல பயிற்சி நிலையத்தில் உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்து, அரசு அலுவலர்களுக்கு புகையிலை தடுப்பு சட்ட அறிவிப்பு பதாகைகள் மற்றும் துண்டு பிரசுரங்களை வழங்கி, உலக புகையிலை ஒழிப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    புகைப்பிடிப்பவருக்கு ஏற்படும் பாதிப்புகள் அனைத்தும் புகைப்பிடிப்பவரின் அருகில் இருப்பவர்களுக்கு ஏற்படுகிறது. தேசிய குடும்ப நல ஆய்வு 20152016ன்படி இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் தான் புகைப்பிடிப்போரின் எண்ணிக்கை 40.1 சதவீதத்திலிருந்து 31.7 சதவீதமாக குறைந்துள்ளது. சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் தடுப்புச்சட்டம், பொது இடங்களில் புகை பிடித்தலை தடை செய்கிறது, சிறார்களுக்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்வதையும், சிறார்கள் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதையும் தடை செய்கிறது.

    மேலும், ரூ.170 கோடி மதிப்பில் புற்று நோய் சிகிச்சைக்கான நேரியல் முடுக்கிகள் சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ராயப்பேட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, கோயம்புத்தூர், மதுரை, தூத்துக்குடி, காஞ்சீபுரம் மாவட்டம் காரப்பேட்டை மற்றும் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஆகிய 10 இடங்களில் விரைவில் அமைக்கப்படும். காஞ்சிபுரம், கோயம்புத்தூர், விழுப்புரம், வேலூர், தஞ்சாவூர், ஈரோடு, திருச்சி, சேலம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 10 அரசு மருத்துவமனைகளில் ரூ.1.50 கோடி செலவில் புற்றுநோயாளிகளுக்கான 10 வலி நிவாரணம் மற்றும் ஆதரவு சிசிச்சை மையங்கள் அமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.


    ×